Yaapu

முனைப்பு

யாப்பு

சரத்து 1. பெயர், விலாசம்

முனைப்பு  (MUNAIPPU)) என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பு சுவிஸ் சிவில் சட்டவரைபின்  60 ff ZGB சரத்துக்கு அமைவாக, அரசியல்,  மத சார்பற்றதாக இயங்கும். இதனுடய நிர்வாகச் செயற்பாட்டு முகவரி பணிப்பாளர் நிருவாகத்தின் முகவரியாக இருக்கும்.

சரத்து 2. நோக்கம்.

அ) இலங்கையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும்மக்களின் கல்வி,  மற்றும்

வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான சிறு கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிப்பது.

சரத்து 3. அங்கத்துவம்

இலங்கை கிழக்கு மாகாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருவரில் ஒருவர் அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்,  அமைப்பில் அங்கத்துவம் பெறத் தகுதியுடயவர்.

அ) அங்கத்துவம் தொடர்பாக பணிப்பாளர் சபை ஆராய்ந்து முடிவு செய்யும்.

ஆ) அங்கத்தவரொருவர் சுய விருப்பின்பேரில் மூன்று மாத முன்னறிவித்தலின் மூலம் விலகிக்கொள்ள முடியம்.

இ) அங்கத்தவர் ஒருவர் அமைப்பின் ஒழுக்காற்று விதிகளுக்கு மாறாகச் செயற்படுகின்றார் என நிர்வாக சபை கருதும் பட்சத்தில்,  குறித்த விடயத்தை பொதுச் சபைக்குக் கொண்டு வந்து குறித்த நபரது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் அங்கத்துவம் இழந்தவராகக் கருதப்படுவார்.

ஈ) நிதி மோசடி பதவி துஸ்பிரயோகம் செயற்திட்டங்களுக்கு ஒத்துழையாமை என்பன ஆகக்கூடுதலான குற்றங்களாகக் கருதப்படும்.

சரத்து 4. சங்கத்தின்அமைப்பு

1)            பொதுச் சபை மன்றத்தின் உயர் கட்டமைப்பாக இருக்கும். வருடத்தில் இரு தடவை இது கூடும். இதைத் தவிரவும் பொதுச் சபைக் கூட்டம் ஒன்று அவசியம் என பணிப்பாளர்சபை   கருதும் பட்சத்தில் பொதுச்சபையைக் கூட்டமுடியும்.

2)            பொதுச் சபைக் கூட்டத்திற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னர் அங்கத்தவர்களுக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.

3)            ஒரு உறப்பினர் ஏதாவது ஒரு விடயம் குறித்து முன்மொழிவு ஒன்றைச் செய்வதாயின் அல்லது யாப்புத்திருத்தம் குறித்து முன்மொழிவதாயின் பொதுச் சபைக்கூட்டத்திற்கு 14 நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலம் பதிவுத் தபாலில் நிருவாகப்பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

) பொதுச்சபையின்கடமைகள்.

 •               பணிப்பாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் (நிறைவேற்றுப்பணிப்பாளர்) பணிப்பாளர், பணிப்பாளர்( நிருவாகம்) பணிப்பாளர்(நிதி,திட்டமிடல்);, பணிப்பாளர்(தொடர்பாடல்);,         பணிப்பாளர் (கணக்காய்வு) 5 பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்  மொத்தம் 11 பேர்)
 •               தெரிவின் போது ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் வருமாயின் வாக்கெடுப்பின் மூலம் செயற்பாட்டாளர் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 •               சரியான செயற்திட்டங்களுக்கு அங்கீகாரமளிப்பது.
 •               புதிய அங்கத்தவர்களை உள்வாங்குவதற்கு அங்கீகாரமளிப்பது.  அங்கத்தவர்களை சரத்து 3. இ). ஈ). விதிகளுக்மைய நீக்குவது.
 •               பணிப்பாளர் சபை உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்தல்.
 •               அறிக்கைகள், வரவுசெலவு, யாப்புத் திருத்தம் என்பவற்றை அங்கீகரித்தல்.

பணிப்பாளர்சபை

 •               அமைப்பின் செயற்பாட்டிற்குப் பொறுப்பாகவுள்ள பணிப்பாளர் சபை  11

உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.

 •               பணிப்பாளர சபை கூட்டங்கள் வருடத்தில் குறைந்தது 4 தடவைகள், கூடியது 6 தடவைகள் நடைபெறும். பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் மூன்று (3) வருடங்கள்.
 •               கிரமமாக அங்கத்துவப் பணம் செலுத்துபவர்கள் மாத்திரமே, பணிப்பாளர் சபையில்அங்கத்துவம் பெற முடியும் என்பதோடு வாக்களிக்கும் தகுதியுமுடையவர்.

) பணிப்பாளர்சபையின்கடமைகள்.

 •               நடைபெறவுள்ளஅன்றையகூட்டத்துக்குத்தலைவர்ஒருவரைத்தெரிவுசெய்தல்
 •               அமைப்பின்நோக்கங்களுடன்தொடர்புடைய, நடைமுறைக்குச்சாத்தியமானதிட்டங்களைபரிசீலிப்பதும், அவற்றிற்கானஅங்கீகாரத்தைப்பொதுச்சபையிடம்பெற்றுஅவற்றைநடைமுறைப்படுத்துவதும்.
 •               பொதுக்கூட்டம்பணிப்பாளர்சபைக்கூட்டம்என்பவற்றைஒழுங்குபடுத்துவது.
 •               திட்டங்களுக்கானநிதியினைக்கையாளுவது, அமைப்பின்உடனடித்தேவைகளைதீர்மானிப்து.

நிறைவேற்றுப்பணிப்பாளரின்கடமைகள்.

 •               அமைப்பின்சகலசெயற்பாடுகளுக்கும்பணிப்பாளர்சபையின்அனுசரணையோடுபொறுப்பாகஇருத்தல்.
 •               அமைப்பின்யாப்புக்குஇணங்கஅமைப்பைவழிநடாத்துதல்.
 •               குழுக்கூட்டத்தில்முடிவுசெய்யப்பட்டசெயற்பாடுகளைவழிநடாத்துதல், செயற்படுத்தல்.
 •               செயற்பாடுகள்அனைத்தையும்மேற்பார்வைசெய்தல்.
 •               நிதிக்குபொறுப்பாகஇருத்தல்வரவுசெலவுஅறிக்கைதயாரித்தலும்பேணுதலும்.
 •               அமைப்பின் பெயரில் திறக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கை திட்டமிடல் பணிப்பாளருடன் இணைந்து நிர்வகித்தல் கையொப்பம் இடல்.
 •               விசேடதேவையின்பொருட்டுசங்கத்தைகூட்டுதல்.
 •               நலன்விரும்;பிகளைசந்தித்துசங்கத்திற்குநிதிதிரட்டல்.
 •               விசேடதேவையின்பொருட்டுமுடிவுகளைமேற்கொள்ளல்..
 •               விசேடதிட்டங்களைஅங்கிகரித்தல்.
 •               கணக்கறிக்கைபுத்தகம்பேணல்

பணிப்பாளரின்கடமைகள்

அ)நிறைவேற்றுப்பணிப்பாளர்இல்லாதபட்சத்துஅவரின்அனைத்துகடமைகளையும்ஆற்றுதல்

ஆ) பணிப்பாளர்களில்யாராவதுபதிவிலகினால்அவருக்கானகடமைகளைமேற்கொள்ளல்.

இ)நலன்விரும்பிகளைசந்தித்துசங்கத்தின்நடவடிக்கைகளைதெளிவுபடுத்தல்.

பணிப்பாளர்நிருவாகம்கடமைகள்.

 •               கூட்டங்களுக்குஅழைப்புவிடுத்தல்.
 •               அமைப்புசம்பந்தமானசகலதபாற்தொடர்புகளையம்பேணுவது.
 •               கூட்டஅறிக்கைகளைத்தயாரிப்பதும்அவற்றைச்சமர்ப்பிப்பதும்.
 •               அங்கத்தவர்தொடர்பானவிபரங்களைநிர்வகித்தல்.
 •               பணிப்பாளர்சபைகூட்டத்தில்எடுக்கப்பட்டமுடிவுகளைநடைமுறைப்படுத்தஉதவுதல்.

பணிப்பாளர்திட்டமிடல்கடமைகள்.

 •               பணிப்பாளர்நிருவாகம்இல்லாதவிடத்துஅவரின்கடமைகளைச்செய்தல்
 •               அமைப்புக்குரியஎதிர்காலதிட்டங்களைதீட்டிபணிப்பாளர்சபைக்குஒப்புவித்தல்.
 •               நிறைவேற்றுப்பணிப்பாளருடன் இணைந்து நிதியினை கையாளுதல். வங்கிக்கணக்கைநிறைவேற்றுப்பணிப்பாளருடன்இணைந்துநிர்வகித்தல். கையொப்பம்இடல்.
 •               இலங்கையில் நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களை பரிசீலனை செய்து பணிப்பாளர் சபையின் அங்கிகாரத்துக்கு விடல்

பணிப்பாளர்தொடர்பாடல்கடமைகள்

 •               அமைப்பின்நிகழ்வுகளைஒழுங்குபடுத்தல்
 •               அமைப்புக்குஅங்கத்தவர்களைசேர்த்தல்
 •               அங்கத்தவர்விண்ணப்பங்களைபரிசீலனைசெய்தல்
 •               அமைப்பின்செய்தி, விளம்பரப்பிரிவைநிர்வகித்தல்

பணிப்பாளர்கணக்காய்வுகடமைகள்

 •               அமைப்பின்கணக்கறிக்கையினைபரிசீலனைசெய்துகையொப்பம்இடல்.
 •               அமைப்பின்நிதிநடவடிக்கைகளைகண்காணித்தல்.
 •               நிறைவேற்றுப்பணிப்பாளர், நிருவாகப்பணிப்பாளர், திட்டமிடல்பணிப்பாளர் அல்லது தொடர்பாடல் பணிப்பாளர் கூட்டங்களுக்குச் கமூகமளிக்க முடியாதபட்சத்தில் அவரின் கடமைகளை ஆற்றுவது.
 •               அமைப்பின்அனைத்துதொடர்பாடல்நடவடிக்கையிலும்சமபங்கேற்றுஅமைப்பைநெறிப்படுத்திவழிநடத்துவது.
 •               இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கான முன்னேற்ற அறிக்கையினை பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பித்தல்.

சரத்து 5. நிதி.

அமைப்புக்கானநிதிஅங்கத்தவர்களின்சந்தாமற்றும்அன்பளிப்புக்கள், நன்கொடைகள்என்பனமூலமாகப்பெறப்படும். அங்கத்தவர்ஒருவருக்கானமாதச்சந்தாளகச. 25.00 ஆகவரையறைசெய்ப்பட்டுள்ளது. குடும்பசந்தாமாதமொன்றுக்குளகச. 40.00 நிறைவேற்றுப்பணிப்பாளர்; அவசரதேவைகளுக்காக 500 சுவிஸ்பிராங்குகளைமாத்திரம்கையில்வைத்திருக்கமுடியும்.

சரத்து 6. அமைப்பைக்கலைத்தல்.

அமைப்பைக்கலைப்பதற்குமூன்றிலிரண்டுபெரும்பாண்மைதேவை. அமைப்பின்சொத்தைஎன்னசெய்வதுஎன்பதைபொதுச்சபைதீர்மானிக்கும்.

சரத்து 7 யாப்புத்திருத்தம்புதியவிடயங்களைச்சேர்த்தல்

பொதுச்சபையின், சமூகமளித்தோரில்மூன்றில்இரண்டுபெரும்பாலானோரின்தீர்மானத்திற்குஏற்பயாப்பில்ஏதேனும்திருத்தங்கள், மாற்றங்கள்கொண்டுவரமுடியும்.

சரத்து 8. யாப்புநடைமுறைக்குவரல்.

26.01.2014

Copyright © 2010-2014 munaippuswiss.com - All Rights Reserved.
Design by Bala