முனைப்பினால் மட்டக்களப்பில் பெண்களுக்கு சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

முனைப்பினால் மட்டக்களப்பில் பெண்களுக்கு சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  குடும்பத்துக்கு  தலைமைதாங்கும்   பெண்களின் வாழ்கை  தரத்தை மேம்படுத்தும்  நோக்கில் முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிதியுதவியில், தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப் பட்டுள்ளது .

முனைப்பு(ஶ்ரீலங்கா) நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இன்று(9ம் திகதி)  சனிக்கிழமைமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆறு குடும்பங்களுக்கு இத் தையல் இயந்திரங்களை  வழங்கிவைத்தார்.

இதன்போது வவுணதீவு,மண்முனை வடக்கு,செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு  இவ்வியந்திரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இதன் போது, வறுமை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலையில் கல்வி கற்கும் (க.பொ.த சாதாரண தரம்) சித்தாண்டி மாவடி வேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு  மாணவிக்கு தனது படிப்பு ஒரு பகுதிச் செலவுக்காக பண உதவியை மாதாந்தம் வழங்கும் பொருட்டு கடந்த மாதம் முதல் தொடர் படிப்புக்காக செலவினையும் முனைப்பு சுவிஸ் அமைப்பு பொறுப்பெடுத்துள்ளது. இம்மாணவிகிக்கான கொடுப்பனவும் இந்நிகழ்வின: போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சாரங்கபாணி.அருள்மொழி, சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் பிரபாகரன் ,முனைப்பு நிறுவனத்தின் பொருளாளர் அரசரெத்தினம்.தயானந்தரவி மற்றும் அலோசகர்  குமாரசாமி.அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்munaippu-09.04-a munaippu-09.04-c munaippu-09.04-d munaippi-09.04-b

Share this Post: Facebook Twitter Pinterest Google Plus StumbleUpon Reddit RSS Email

Related Posts

Leave a Comment