முனைப்பினால் துவிச்சக்கரவண்டிகள் நீர்ப்பம்பி வழங்கி வைப்பு.

முனைப்பினால் துவிச்சக்கரவண்டிகள் நீர்ப்பம்பி வழங்கி வைப்பு.

இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் முனைப்புஸ்ரீலங்கா நிறுவனத்தினால்வறுமைக்கோட்டின்கீழ்வாழும் கல்குடா, மட்டக்களப்பு கல்விவலயங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டில்களும்,வாகரை கடடு;முறிவு மாணவர்களின் குடிநீர்ப்பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் நீர்ப்பம்பியும் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு வலயக்கல்வியலுவலகத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி பொருட்களை மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் வழங்கி வைத்தார்.

யுhழ்ப்பாணம் இணுவிலைச்சேர்ந்த் தற்போது சுவிஸ்லாந்து நாட்டில் வசித்துவரும் தி,திருமதி இராசலிங்கம்(செட்டி) தம்பதியினரின் புதல்வன் தரணியனின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் அன்பளிப்éடாவே துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

நுpகழ்வில் முனைப்பின் ஆலோசகர் கே. புஸ்பராசா,செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.cycle-a cycle-b

Share this Post: Facebook Twitter Pinterest Google Plus StumbleUpon Reddit RSS Email

Related Posts

Leave a Comment