முனைப்பினால் சத்திர சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

முனைப்பினால் சத்திர சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

முனைப்பு நிறுவனத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி.              வடகிழக்கில் யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கவீனர்களாகவும் உடலிலே வெடி குண்டுகளின்
துண்டுகளை சுமந்தவர்களாகவும் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி
வாழமுடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.   அவ்வாறு
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வேலைத்திட்டத்தினை முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவானம் முனைப்பு சுவிஸ் அமைப்பின் அனுசரனையுடன் முன்னெடுத்து
வருகின்றது.

இந் நடவடிக்கையின் கீழ்  திங்கள் கிழமை முனைப்பு
ஸ்ரீ லங்கா நிறுவனத்தினுடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை
மேற்கொள்ள வசதியின்றி கஸ்ரத்தை அனுபவித்து வந்த இருவருக்கு அவர்களது
சிகிச்சைக்கு உதவுவதற்காக ஐம்பதனாயிரம்,முப்பதனாயிரம் ரூபா என்ற
அடிப்படையில் உதவி வழங்கப்பட்டது.

முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் தலைவர் மா.சசிகுமார் தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வின் போது முனைப்பு சுவிஸ் அமைப்பின் உறுப்பினர்
சுந்தரலிங்கம்.கிருபா கலந்துகொண்டு நிதியினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில்
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர்
ரி.தயானந்தரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.munaippu-12-a munaippu-12b

Share this Post: Facebook Twitter Pinterest Google Plus StumbleUpon Reddit RSS Email

Related Posts

Leave a Comment